Tamilnadu
“தூங்கிக்கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை” : பக்கத்து வீட்டு இளைஞர் கைது - விசாரணையில் பகீர் தகவல்!
சென்னை, தண்டையார்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் முல்லா. இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளோடு அதேபகுதியில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு முல்லா வீட்டின் பக்கத்து வீட்டில் வசிக்கும் மகேஷ்குமார் என்ற இளைஞர் முல்லா வீட்டிற்கு திருட வந்துள்ளார். அப்போது வீட்டிலிருந்த பணத்தை திருடிய பின் செல்லாமல், அறையில் குழந்தைகளோடு தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை பார்த்துள்ளார்.
பின்னர் அவர் அருகே சென்று அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயற்சித்துள்ளார். அப்போது விழித்துக்கொண்ட அந்த பெண் அலறியுள்ளார். பெண்ணின் சத்தத்தை கேட்டு வந்த முல்லா, மகேஷை பிடிப்பதற்குள் சுவர் மீது ஏறி குதித்து தப்பி விட்டார்.
இந்த நிலையில், மறுநாள் காலை, இந்த சம்பவம் குறித்து முல்லா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மகேஷ்குமாரை தேடி பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பக்கத்து வீட்டில் திருட வந்த போது, பெண்ணுக்கு பாலியல் கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“MISA தியாகத்தைக் கொச்சைப்படுத்துவதா?” - விஜய்யைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வெகுண்டெழுந்த தி.மு.க!
-
ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சரவணன் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் விஜய்க்கு பயம் : காரணத்தை சொன்ன முரசொலி!
-
“தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற இயைந்தவர் சாலமன் பாப்பையா” : மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
இம்மானுவேல் சேகரனாரின் பெரும்புகழ் வாழ்க : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
மனசாட்சியற்ற – சந்தர்ப்பவாத – கல்லாப்பெட்டி கூட்டணி : விஜய்யின் முகத்திரையைக் கிழித்த முரசொலி!