Tamilnadu
பெண் காவலருக்கு வளைகாப்பு நடத்திய சக காவல் அதிகாரிகள்.. காவல் நிலையத்தில் நெகிழ்ச்சி சம்பவம் !
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியை அடுத்துள்ள சிறுஞ்சுனை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயந்தி. அன்னவாசல் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் இவரும், புல்வயலை பகுதியை சேர்ந்த பிரசாந்த் என்பவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்கததால், இரு வீட்டாருமே இவர்களுடன் உறவில் இல்லை. இதனால் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஜெயந்திக்கு வளைகாப்பு நடத்துவதில் சிக்கல் இருந்தது. இதனை அறிந்த சக காவலர்கள், ஜெயந்திக்கு வளைகாப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி, இன்று (ஜூன் 22), ஜெயந்திக்கு வளையல், சீர் என்று வளைகாப்பு விழாவில் வைக்கப்படும் முக்கிய பொருட்களை வைத்து டி.எஸ்.பி அருள்மொழி அரசு தலைமையில் வளைகாப்பு விழாவை நடத்தினர்.
இதில், ஜெயந்தி - பிரசாந்த் தம்பதியினரை அமரவைத்து, அவர்களுக்கு சந்தனம் பூசியதோடு ஜெயந்தி கைக்கு வளையல் அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சி ஜெயந்தி, பிரசாந்தை மட்டுமின்றி அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்.. பிரம்மாண்ட விழா.. கழகத்தில் இணைந்த 5,000 மாற்றுக் கட்சியினர்”
-
“ஓய்வை அறிவித்த இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்.. கட்டாயப் படுத்தப்பட்டாரா?” - முழு விவரம் அறிய!
-
“எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்.. உடன்பிறப்புக்களே தயாராகுங்கள்” - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தவெக அமைச்சர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய சபரீசன்... 15 நாட்கள் மட்டுமே கெடு... விவரம் உள்ளே!
-
போதை பொருள் பயன்படுத்தியது போல் வீடியோ : தவெக அமைச்சருக்கு எதிராக களமிறங்கும் திமுக மாணவர் அணி !