Tamilnadu

"விலைவாசியை கட்டுப்படுத்த தகுதியில்லாத ஒன்றிய பா.ஜ.க அரசு": தி.மு.க MP டி.ஆர்.பாலு கடும் தாக்கு!

நாடாளுமுன்ற கூட்டத் தொடர் ஜூலை 19ம் தேதியில் இருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் விலைவாசி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. ஆனால் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு செவிகொடுக்காமல் கூட்டத் தொடரை ஒன்றிய பா.ஜ.க அரசு ஒத்திவைத்து வருகிறது.

இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல மக்கள் நல பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று பலமுறை நோட்டீஸ் அளித்தும் அதன் மீது விவாதம் நடத்த மறுப்பு தெரிவித்து வரும் ஒன்றிய அரசை கண்டித்து தி.மு.க மக்களை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற குழு தலைவர் டி. ஆர். பாலு,"விலைவாசி உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் பேச நோட்டீஸ் வழங்கப்படுகிறது. ஆனால் பதில் கூறவேண்டும் என்ற பொறுப்புணர்வை மறந்து ஒன்றிய அரசு செயல்படுகிறது.

அடித்தட்டு மக்களும் சாமானிய மக்களும் வஞ்சிக்கப்படும் வகையில் ஒன்றிய அரசின் செயல்பாடுகள் உள்ள நிலையில் இன்றும் தி.மு.க தரப்பில் கேள்வி எழுப்பினோம். அதற்கு பதில்கூற மறுத்த நிலையில் அவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளோம்.

பிரதமர் மோடி எவ்வளவோ கூறியுள்ளார். 2 கோடி வேலைவாய்ப்பு தருகிறோம், 15 லட்சம் பணம் வங்கிகளில் செலுத்துவோம் என்றெல்லாம் பேசினார் பிரதமர். ஆனால் அதில் ஒன்றையவது நிறைவேற்றி உள்ளாரா?.

மக்களுக்கு உரிய உணவு கிடைக்காமல் உள்ளனர். இந்தியாவில் பட்டினி சாவு அதிகரிக்க போகிறது. எரிபொருள் உள்ளிட்ட பொருட்களின் சர்வதேச அளவில் விலை குறைந்த போதிலும் இந்தியாவில் மட்டும் ஏன் விலை குறையவில்லை? விலை குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள உங்களால் முடியவில்லை என்றால் எங்களை போன்ற முன்னாள் அமைச்சர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும் எனவும் ஆலோசனை கேட்டால் வழங்க தயாராக உள்ளோம். தெரிவித்தார்.

இந்தியாவில் இப்போது உள்ள இதே நிலை தொடர்ந்தால் இலங்கை நிலை தான் இந்தியாவில் ஏற்படும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு புகழ் பழனிசாமி சட்டம் ஒழுங்கைப் பற்றிப் பேசலாமா?.. முரசொலி சரமாரி தாக்கு!