Tamilnadu
7ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை : டியூசன் ஆசிரியை அவரது காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு!
சென்னை தி.நகர் பகுதியில் 29 வயது ஆசிரியை ஒருவர், தன்னுடன் டியூஷன் படித்து வந்த 7வது படிக்கும் சிறுமியை தனது காதலருடன் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விடுதிக்கு காரில் அழைத்து சென்றுள்ளார்.
அங்கு அந்த சிறுமியை ஆசிரியையின் காதலர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, சிறுமியை மிரட்டி, ஆசிரியை தங்க நகை மற்றும் பணம் பெற்று வந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த சிறுமியின் பெற்றோர், தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி ஆசிரியை மற்றும் காதலரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலெட்சுமி முன் நடைபெற்றது.
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், குற்றச்சாட்டுகள் நிரூபணமாவதாக கூறி, டியூஷன் ஆசிரியை மற்றும் அவரது காதலருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். மேலும் டியூஷன் ஆசிரியைக்கு 70 ஆயிரம் ரூபாயும், காதலருக்கு 60 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Also Read
-
ஆவின் பச்சை நிற பால் விலை உயர்வா?.. : அவதூறு பரப்பும் தவெக.. - உண்மையை விளக்கிய TN Fact Check!
-
விறுவிறுப்பாக தயாராகும் தி.மு.க தேர்தல் அறிக்கை! : 4 நாட்களில் 52,080 பரிந்துரைகள் தெரிவித்த பொதுமக்கள்!
-
உலகம் உங்கள் கையில் : “அனைத்து வகையிலும் வெற்றிமிகு மாநிலமாக இருக்கிறது தமிழ்நாடு!” - முரசொலி புகழாரம்!
-
100-வது நாளை நெருங்கும் பிக்பாஸ் வீடு; கராசார பொங்கல் விருந்துக்கு தயாராகும் போட்டியாளர்கள்!
-
90 அணைகளை கண்காணிக்க : ஒருங்கிணைந்த மேலாண்மை மைய கட்டடத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி!