Tamilnadu
திருமணம் செய்ய மறுத்த காதலி.. 60 அடி உயர்மின் அழுத்த கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்!
சென்னை குரோம்பேட்டை அடுத்த ராதா நகர் பகுதியை சேர்ந்தவர் கிஷோர். இளைஞரான இவர் அதே பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவியை 2 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், காதலியிடம் கிஷோர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறியுள்ளார். ஆனால் இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த கிஷார் அருகே இருந்த 60 அடி உயரம் கொண்ட உயர்மின் அழுத்தக் கோபுரத்தின் மீது ஏறியுள்ளார்.
அங்கிருந்துகொண்டு கிஷோர், காதலியைத் திருமணம் செய்து வைக்க வேண்டும் இல்லை என்றால் தற்கொலை தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து போலிஸார் மின் வாரியத்திற்குத் தகவல் கொடுத்து அப்பகுதியில் மின் இணைப்பைத் துண்டித்துள்ளனர். மேலும் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் சென்ற இரண்டு மணி நேரம் அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் அவர் கீழே இறங்கி வரவில்லை.
இதனால் அவரின் காதலியை போலிஸார் வரவழைத்து, திருமணம் செய்வதாக உறுதி கொடுத்த பின்னர் கிஷோர் உயர்மின் அழுத்த கோபுரத்திலிருந்து கீழே இறங்கியுள்ளார். இதையடுத்து போலிஸார் அவரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!