Tamilnadu
அப்பளம் போல் நொறுங்கிய கார்.. உடல் நசுங்கி கணவன் - மனைவி பரிதாப பலி : நெஞ்சை உருக்கும் சோக சம்பவம் !
சென்னை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் (30). இவர் தனியார் கம்பெனி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி நித்திஷா (27). இந்த தம்பதிக்கு ஜெனிஷா ஸ்ரீ ( 9), பிரணவ் ஆதித்யா (8) என சிறுவர்கள் உள்ளனர்.
இந்நிலையில், மனோஜ் தனது குடும்பத்தாருடன் காரில் நெல்லையை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். இதையடுத்து கோவில்பட்டியிலிருந்து விருதுநகர் நோக்கி கார் சென்று கொண்டிருந்தபோது தனியார் பேருந்து மோதியுள்ளது.
இதில் காரின் முன்பகுதி முழுவதுமாக நொறுங்கியுள்ளது. இந்த விபத்தில் மனோஜ் அவரது மனைவி நித்திஷா ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் சிறுவர்கள் ஜெனிஷா ஸ்ரீ, பிரணவ் ஆதித்யா இருவரும் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
இவர்களை மீட்ட போலிஸார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!