Tamilnadu
இருசக்கர வாகனத்தின் மீது மோதிய லாரி.. உடல் நசுங்கி தாய் - மகன் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சென்னை அடுத்த மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மனைவி நிர்மலா. இந்த தம்பதிக்கு நவீன்குமார் என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில் தாய் நிர்மலாவும், மகன் நவீன்குமாரும் மீஞ்சூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த லாரி ஒன்று இவர்களது வாகனத்தின் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த விபத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள் இவர்களுக்கு என்னானது என அருகே சென்றுபார்த்தனர். அப்போது இருவரும் பலத்த காயத்துடன் ரத்தவெள்ளத்தில் இருந்தனர்.
உடனே விபத்து குறித்து போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலிஸார் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். ஆனால் அவர்கள் இருவரும் செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் தாய், மகன் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், ஸ்ரீபெரும்புதூர் - தாம்பரம் சாலையில் நண்பர்களான டேவிட், பார்த்திபன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, டிப்பர் லாரி ஒன்று இவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் வெவ்வேறு சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!