Tamilnadu
“பொறியியல், கலைக் கல்லூரிகளில் சேர அவகாசம் நீட்டிப்பு” : அமைச்சர் பொன்முடி முக்கிய அறிவிப்பு !
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 20 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வு முடிவுகள் வெளியான அன்றே பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை, அறிவியல் கல்லுரிகளில் சேர, ஜூன் 22 முதல் ஜூலை 7-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று உயர்க்கல்வித்துறை அறிவித்தது.
இந்த நிலையில், CBSE தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், மாணவர்கள் விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, "தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகளில் மாணவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், CBSE தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. எனவே, தற்போது அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மாணவர்கள் CBSE தேர்வு முடிவுகள் வெளியாகி 5 நாட்கள் வரை விண்ணப்பிக்கலாம். இந்த அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெறும். கல்லூரி மாணவிகளுக்கான ரூ.1,000 திட்டத்துக்கு இதுவரை 2 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். அரசு கலைக் கல்லூரிகளில் சேர 3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்." என்று தெரிவித்தார்.
Also Read
-
“இதுதான் சரியான தருணம்!” : திமுக-விற்கான மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு பட்டியலை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்!
-
“6 மாதம் பொறுத்திருந்தால், பறிபோன உயிர்களைத் திருப்பித்தருவாரா ரீல்ஸ் முதலமைச்சர்?” : தி.மு.க கேள்வி!
-
மறைமுகமாக போதைப் பொருள் புழக்கத்தை ஊக்குவிக்கிறாரா விஜய்? : தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
-
“கொடூரமான குற்றங்களுக்கு இரக்கம் காட்டக்கூடாது” : பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
9-ஆம் வகுப்பு பாடத்தில் மனுஸ்மிருதி : தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி கண்டனம்!