Tamilnadu
முந்தி செல்ல முயன்ற சொகுசு பேருந்து.. லாரி மீது மோதியதில் 2 பேர் பலி.. அதிகாலையில் நடந்த கோர விபத்து !
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்து பூ மாம்பாக்கம் என்ற பகுதி உள்ளது. இதன் அருகே உள்ள சென்னை - திருச்சி 4 வழி சாலையில், இன்று அதிகாலை லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த லாரிக்கு பின்னால், சென்னையில் இருந்து தேனிக்கு புறப்பட்ட தனியார் சொகுசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.
இந்த நிலையில், லாரியை முந்தி செல்வதற்காக, அந்த தனியார் பேருந்து ஓட்டுநர் முயன்றுள்ளார். அப்போது லாரியின் இடது புறத்தில் தனியார் பேருந்து மோத, விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த இந்த தனியார் பேருந்து, விபத்துக்குள்ளான போது, அதிலிருந்த ஓட்டுநர் சிவா என்பவரும், மாற்று ஓட்டுநரான புலிக்குட்டி என்பவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு எதுவும் ஆகவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையடுத்து காலையில் நடைபெற்ற இந்த கோர சம்பவம் குறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை காவல்துறையினர் விரைந்து வந்து இறந்த உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிகாலையில் நடைபெற்ற இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு... அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு !
-
”திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும்” : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பா.ஜ.கவின் கொத்தடிமையாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி : இரா.முத்தரசன் கடும் தாக்கு!
-
ஜானகி vs கேரளா ஸ்டேட்: முடிவுக்கு வந்த பிரச்சினை- தணிக்கை குழுவின் கோரிக்கை ஏற்பு- புதிய படத்தலைப்பு என்ன
-
“மாணவர்கள் கோட்சே வழியில் சென்று விடக்கூடாது” : கல்லூரி விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!