Tamilnadu
திடீரென தீப்பிடித்து எரிந்த கார்.. காலையில் நடைபயிற்சி சென்றவர்கள் அதிர்ச்சி!
சென்னை, திருவல்லிக்கேணி கஜபதி தெருவில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பொலிரோ கார் ஒன்று திடீரென இன்று அதிகாலை தீடிரென தீ பிடித்து எரிந்துள்ளது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனே காவல்துறைக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர். பிறகு அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயயை அனைத்தனர்.
மேலும் எரிந்த இந்த காருக்கு யாரும் உரிமை கோரவில்லை. தீயில் முழுமையாக கார் எரிந்துள்ளதால் இந்த கார் யாரடையது என்பது அடையாளம் காண்பதில் போலிஸாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த மெக்கானிக் கடை அருகே கார் தீ பிடித்து எரிந்ததால் பழதுபார்ப்பதற்காக இந்த கார் வந்திருக்குமோ என போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது விஷமிகள் யாராவது தீ வைத்து விட்டு சென்றார்களா? என்கிற அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடனடியாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவிக்கப்பட்டதால் அடுத்தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் தீ விபத்தில் இருந்து தப்பின என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
’தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ : தமிழ்நாடு முழுவதும் செப்.20,21 தீர்மான ஏற்புக் கூட்டங்கள்!
-
யார் பொறுப்பேற்பது? : விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி!
-
முகத்தை மறைத்துக் கொண்டு வெளியேறுவது ஏன்? : பழனிசாமிக்கு தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
-
“இதுக்கெல்லாம் துடிக்காத நெஞ்சம் முகமூடி வீடியோவை வெளியிட்டதால துடிக்குதோ” -அதிமுகவுக்கு குவியும் கண்டனம்
-
61 வயது மூதாட்டியிடம் 3 சவரன் தங்கநகை வழிப்பறி.. தவெக பிரமுகர் கைது.. விசாரணையில் ஷாக்!