Tamilnadu
பிரபல YouTubers புகழ்ந்த கடையில் கெட்டுப்போன மீன்.. ரெய்டின்போது கோபப்பட்ட அதிகாரி.. நடந்தது என்ன ?
சென்னையில் உள்ள அண்ணாநகரில் ரோஸ்வாட்டர் என்ற அசைவஉணவு கடை அமைந்துள்ளது. அந்த கடையில் பல வித கடல் உணவுகளும் வழங்கப்படுகிறது. அந்த பகுதியில் பிரசித்தி பெற்ற இந்த கடையை குறித்து புகப்பெற்ற பல்வேறு யூ- டியுபர்களும் ஆஹா, ஓஹோ என கூறியிருந்தனர்,
யூ- டியுபர்களின் இந்த செயலினால் இந்த கடை மேலும் பிரபலமானது. இதைத் தொடர்ந்து இந்த கடைக்கு வரும் வாடிக்கையாளர் கூட்டம் அதிகரித்தது. அதோடு இந்த கடையில் கெட்டுப்போன உணவுகளை விற்பதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில் புகார் வந்த ரோஸ்வாட்டர் என்ற அசைவஉணவு கடையில் உணவுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது கெட்டுப்போன இறைச்சிகளை விற்பனைக்கு பயன்படுத்தியது தெரியவந்தது. மேலும் அந்த உணவகத்தில் உணவு தயாரிக்கப்படும் இடம், இறைச்சி பதப்படுத்தப்படும் இயந்திரங்கள் போன்ற அனைத்தும் சுகாதாரமற்ற முறையில் இருந்ததும் தெரியவந்துள்ளது.
அந்த ஹோட்டலில் இருந்து கெட்டுப்போன 10 கிலோ இறால், 45 கிலோ சிக்கன் ,மட்டன் உள்ளிட்ட மாதிரிகளை கைப்பற்றி அதனை உணவு சோதனைக்கு உணவுத்துறை அதிகாரிகள் அனுப்பியுள்ளனர்.
மேலும், ஆய்வு முடிவுகள் வரும்வரை ஹோட்டலை நடத்த தடை விதித்து அந்த ஹோட்டலுக்கு சீல் வைத்துள்ளனர். இந்த உணவை நீங்கள் உண்பீர்களா? என அதிகாரிகள் கோபப்படும் விடீயோக்களும் வெளியாகியுள்ளன.
இந்த தகவல் வெளியானதும் இந்த ஹோட்டல் உணவை சூப்பர், செம்ம என்று புகழ்ந்த யூ- டியுபர்களை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர், மேலும், யூ- டியுபர்களின் பேச்சை கேட்டு எல்லாம் இது போன்ற கடைக்கு செல்லவேண்டாம் என்றும் அறிவுரைகளை கூறிவருகின்றனர்.
Also Read
-
“நம்முடைய அடையாளத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது” - இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பில் முதலமைச்சர்!
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!