Tamilnadu
வலிப்பு நோயால் சாலையில் துடிதுடித்த இளைஞர்.. முதலுதவி செய்து உயிரை காப்பாற்றிய போலிஸ்: நெகிழ்ச்சி சம்பவம்
சென்னை அடையாறு பகுதியில் உள்ள GRT கடை உள்ளது. இந்த கடையில் அருகே சாலையில் இளைஞர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.
அப்போது, அந்த இளைஞரின் கை மற்றும் கால்கள் வலிப்பு ஏற்பட்டுத் துடிதுடித்துள்ளது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து அவரை நெருங்கிப் பார்ப்பதுக்கு அச்சப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அங்கு ரோந்து பணியிலிருந்து போலிஸார் இதைப்பார்த்து உடனே அந்த இளைஞருக்கு முதலுதவி செய்துள்ளனர். பிறகு 108 ஆம்புலன் மருத்துவர்களை வரவழைத்து பரிசோதனை செய்தனர்.
அப்போது அந்த இளைஞர் நலமுடன் இருப்பதாகவும் அருக்கு திடீரென வலிப்பு வந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நான் 2 நாட்களாக சாப்பிடவில்லை என போலிஸாரிடம் அந்த இளைஞர் கூறியுள்ளார்.
இதையடுத்து போலிஸார் அவருக்கு இளநீர் மற்றும் உணவு வாங்கி கொடுத்து அந்த இளைஞர் செல்லும் இடத்திற்கு பத்திரமாக வழி அனுப்பிவைத்தனர். போலிஸாரின் இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
2026ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜன.20 அன்று தொடக்கம்! : சபாநாயகர் அப்பாவு தகவல்!
-
திருவண்ணாமலையில் “வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்- 2025!” : முழு விவரம் உள்ளே!
-
“தன்னலம் கருதா உழைப்புக்கு வாழும் சாட்சி தோழர் நல்லகண்ணு ஐயா!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
-
“தமிழில் ‘வணக்கம்’ சொன்னால் போதுமா?” : ஒன்றிய அரசைக் கண்டித்த முரசொலி தலையங்கம்!
-
“நானே ஜெயித்ததுபோல இருக்கு”: SBI வங்கி தேர்வில் வெற்றி பெற்ற கமலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!