Tamilnadu
பெற்றோர்களே நீங்கள் இதை செய்யுங்கள்.. அட்வைஸ் சொன்ன MRK பன்னீர்செல்வம் !
தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் 'நான் முதல்வன் - கல்லூரிக் கனவு' என்ற மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி அரசு கலைக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டு கையேட்டினை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து மேடையில் அவர் பேசுகையில், "மாணவர்களுக்கு உயர்கல்வியில் நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு 'நான் முதல்வன் - கல்லூரி கனவு' நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இது போன்ற நிகழ்ச்சிகள் மாணவர்களின் வாழ்வில் திருப்புமுனையாக அமையும், நல்ல வாய்ப்பாகவும் அமையும். இது போன்ற நிகழ்ச்சிகள் மாணவர்களின் வாழ்வில் திருப்புமுனையாக அமையும், நல்ல வாய்ப்பாகவும் அமையும்.
நமது முதல்வர் மாணவர்களின் எதிர்காலத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டு அவர்கள் அனைத்து துறையிலும் முதல்வனாக திகழ வேண்டும் என்ற உன்னத நோக்கில் இந்த நிகழ்ச்சிகளை நடத்த உத்தரவிட்டுள்ளார். கல்வியில் முதல்வன், அறிவாற்றலில் முதல்வன், படைப்புத்திறனில் முதல்வன், சமத்துவமாக மற்றவர்கள் மதிக்கத்தக்க வகையில் மாணவர்கள் விளங்க வேண்டும். உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சிகளை மாணவ, மாணவியர் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டு உயர்கல்வியை பெற வேண்டும்.
உயர்கல்வியில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் துறைகளை பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். மாணவர்களின் விருப்பமின்றி, கட்டாயப்படுத்தி உயர்கல்வியில் அவர்களை சேர்ப்பது சரியாக அமையாது" என்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்டத்தை சார்ந்த 12 ஆம் வகுப்பு முடித்த 1600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Also Read
-
"அதானி, அம்பானிக்கு செய்ததை போல திருப்பூர்,கோவையைக் காப்பாற்ற மோடி செய்தது என்ன?" - முரசொலி கேள்வி !
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!