Tamilnadu
24 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்.. காரணம் என்ன?
செங்கல்பட்டு மாவட்டம், நாவலூர் அருக உள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் அல்போன்ஸா. இவரது மகன் ஜெனிபர்.
இவர் பல்லாவரத்தில் உள்ள தனியார் ஐடி கம்பெனி ஒன்றில் வேலைபார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் இவரின் வேலை பறிபோனதாக கூறப்படுகிறது. இதையடுத்து பல இடங்களில் வேலைத்தேடி அலைந்துள்ளார்.
ஆனால், அவருக்கு எங்கும் வேலை கிடைக்கவில்லை. இதனால் கடும் மன உளைச்சலில் ஜெனிபர் இருந்துவந்துள்ளார். இந்நிலையில் தனது அடுக்குமாடி குடியிருப்பின் 24வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!
Also Read
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!
-
கோவையில் 5 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட ‘தங்கநகை பூங்கா’! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!