Tamilnadu
“தூத்துக்குடி to கோவை.. 36 பேருடன் சென்ற சொகுசு பேருந்து எரிந்து நாசம்”: நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்!
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் இருந்து இரவு 8 மணி அளவில் கோயம்புத்தூரை நோக்கி எஸ்.பி.எஸ் தனியார் ஆம்னி பேருந்து 36 பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. பேருந்தை காயாமொழி சேர்ந்த சத்யராஜ் (34) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.
இந்நிலையில், ஓட்டப்பிடாரம் அருகே புதூர்பாண்டியபுரம் டோல்கேட் பகுதியை இரவு 10 மணி அளவில் தாண்டி சென்று கொண்டிருந்தது. அப்போது மின் கசிவு காரணமாக பேருந்தில் இருந்து தீப்பொறி வந்துள்ளது.
இதை அடுத்து டிரைவர் ஓரமாக நிறுத்தி பார்த்த பொழுது, தீ மளமளவென பரவ தொடங்கியதை அடுத்து, பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக பயணிகள் அனைவரையும் பத்திரமாக இறக்கி விடப்பட்டனர். மேலும் பேருந்து முழுவதும் பற்றி எரிந்து எலும்புக்கூடாக காட்சியளித்தது. பயணிகளின் உடமைகள் அனைத்தும் தீக்கிரையானது.
தீ விபத்து குறித்து சிப்காட் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயம் ஏதும் இன்றி உயிர் தப்பினர். இச்சம்பவம் குறித்து புதியம்புத்தூர் காவல் நிலைய போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
“74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்காதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“அரசியலமைப்புப்படி வழங்க வேண்டிய 27% இடஒதுக்கீடு எங்கே போனது? இதுதான் சமூக நீதியா?” : பி.வில்சன் எம்.பி!
-
தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 - 2025 தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“பா.ஜ.க.வின் பழிவாங்கும் நோக்கம் அம்பலமாகியுள்ளது!”: ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு குறித்து முதலமைச்சர் பதிவு!
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?