Tamilnadu
"பா.ஜ.க-வின் காலை பிடித்து கெஞ்சும் நிலைக்கு சென்ற அ.தி.மு.க": கே.பாலகிருஷ்ணன் கடும் தாக்கு!
தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதாமல் பா.ஜ.க-வுக்கு காலை பிடித்து கெஞ்சும் நிலையில் தான் அ.தி.மு.க உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன்" குடியரவுத்தலைவர் தேர்தலில் நாடு முழுவதிலும் உள்ள எதிர்கட்சிகள் ஒன்றியனைந்து யஷ்வந்த் சின்ஹா நிறுத்தப்பட்டுள்ளார். இந்த தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெறுவது அப்வளவு எளிதானது அல்ல .பா.ஜ.க-வில் இருப்பவர்களே அவ நம்பிக்கை மற்றும் அதிருப்தியில் உள்ளனர்.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க,பாஜக கூட்டணியை விட மூன்று மடங்கு வாக்குகள் எதிர் கட்சி வேட்பாளர் யஷ்வந்த சின்ஹாவுக்கு கிடைக்கும். ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்தை நாடு முழுவதிலும் இளைஞர்கள் எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நான்கு ஆண்டுகள் ராணுவ பயிற்சி பெற்று இளைஞர்கள் வெளியேற்றப்படும் போது அவர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மாறும் என்பது பா.ஜ.க கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால் அதை பற்றி கவலை படவில்லை. இதனால் இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
அ.தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள அதிகார போட்டி தான் இந்த பிரச்சனைக்கு காரணம் நாட்டின் நலன் சார்ந்த அல்ல.மோடியை எதிர்த்து அனைத்து தரப்பு அரசியல் கட்சிகள் குரல் எழுப்பி வரும் நிலையில் அ.தி.மு.க-வில் பன்னீர் செல்வம்,பழனிச்சாமி, சசிகலா, டி.டி.வி.தினகரன் பாஜகவின் மோசமான நிலையை விமர்சனம் செய்வது இல்லை. அவர்களிடம் சமரசம் செய்துகொண்டு காலை பிடித்து கெஞ்சும் நிலையில் தான் உள்ளனர்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”திமுக-வை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!
-
தி.மு.க முப்பெரும் விழா : கனிமொழி MP-க்கு பெரியார் விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
2026-ல் திமுகவின் வெற்றிக் கணக்கு இங்கிருந்து தொடங்குவோம் : முப்பெரும் விழா - செந்தில்பாலாஜி வரவேற்புரை!
-
தி.மு.க முப்பெரும் விழா தொடங்கியது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!
-
“தி.மு.க.வை வகுத்தால் தமிழ்நாடு! தமிழ்நாடு மக்களை கூட்டினால் தி.மு.க!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!