Tamilnadu
9ம் வகுப்பு மாணவர் மாயமான வழக்கில் திடீர் திருப்பம்.. சகோதரன் முறையைச் சேர்ந்த இளைஞர் போக்சோவில் கைது!
திருச்சி கல்லுக்குழி பகுதியைச் சேர்ந்த தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் படித்து வரும் ஒன்பதாம் வகுப்பு மாணவி கடந்த 14-ஆம் தேதி வீட்டை விட்டு திடீரென மாயமானார். அவரை எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் அவரது பெற்றோர்கள் திருச்சி கன்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலிஸார் நடத்திய விசாரணையில் 9ம் வகுப்பு மாணவியை கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் மகேந்திரன் அழைத்துச்சென்றது தெரியவந்தது. மகேந்திரன் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள டீ கடையில் கேஷியராக பணிபுரிந்து வருகிறார்.
இதனையடுத்து மணப்பாறை அயன்புரம் பகுதியில் பள்ளி மாணவியுடன் தங்கியிருந்த மகேந்திரனை கண்டோன்மெண்ட் மகளிர் போலிஸ் கைது செய்து நடத்திய விசாரணையில் பள்ளி மாணவியை மகேந்திரன் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது .
இதனையடுத்து மகேந்திரனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பள்ளி மாணவியும், மகேந்திரனும் உறவினர்கள் எனவும் மாணவிக்கு மகேந்திரன் சகோதரன் முறை வேண்டும் என போலிஸார் கூறி அதிர்ச்சி அளித்தனர்.
Also Read
-
“இது ஜால்ரா பட்ஜெட்.. எங்கள் கேள்விகளுக்கு முடிந்தால் முதலமைச்சர் பதில் சொல்லட்டும்” : உதயநிதி ஸ்டாலின்!
-
வெற்று பட்ஜெட்டாக அமைந்திருக்கிறது வேளாண் நிதிநிலை அறிக்கை : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
-
வேளாண் பட்ஜெட்டிலும் ஸ்டிக்கர் ஒட்டிய த.வெ.க அரசு : பல திட்டங்களுக்கு நிதியும் குறைப்பு!
-
உதயநிதி ஏற்படுத்திய எழுச்சி : தனக்குத் தானே ‘சூனியம்' வைத்துக் கொண்ட முதலமைச்சர் விஜய்!
-
“தவெக ஆதரவு.. அமைச்சர் பதவி ஆசை.. ராஜினாமா செய்ய வைகோ நிர்பந்தித்தார்” : மதிமுக எம்.எல்.ஏ-க்கள் பேட்டி!