Tamilnadu
குற்றவாளிக்கு மாநிலச் செயலாளர் பதவி கொடுத்த பா.ஜ.க.. அண்ணாமலையின் முடிவால் பொதுமக்கள் அதிர்ச்சி!
தமிழக பா,ஜ.க தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலை பொறுப்பேற்ற பின்னர் தமிழக பா.ஜ.கவில் குற்றப்பின்னணி கொண்டவர்கள் சேர்வது அதிகரித்து வருகிறது. குறிப்பாக ரௌடிகள் பா.ஜ.க-வில் இணைந்து வருகின்றனர்.
அந்த வரிசையில், மோசடி வரிசையில் போலிஸால் தேடப்பட்டு வரும் நபருக்கு பா.ஜ.க-வில் முக்கிய பதவி கொடுப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் பெயரில் விளம்பரம் ஒன்று வெளியானது. அதில், ரூ.1லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.32ஆயிரம் வட்டியாக வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த விளம்பரம் மோசடி செய்யும் திட்டத்தின் ஒரு பகுதி என புகார் எழுந்த நிலையில் இது தொடர்பாக விசாரணை நடைபெற்றது. அதில் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் நிர்வாகிகள் மீது வழக்கு பதியப்பட்டது.
மேலும் அதன் இயக்குநர்கள் பாஸ்கர், மோகன்பாபு அகியோர் கைது செய்யப்பட்டு ஆருத்ரா நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துகள், 70 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. இது தவிர தலைமறைவாக உள்ள உஷா, ஹரிஷ், ராஜசேகர் உட்பட மேலும் சிலரை போலிஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில் , இந்த வழக்கில் 4-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த ஹரிஷ்க்கு பா.ஜ.க-வில் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநிலச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பா.ஜ.க-வில் குற்ற பின்னணி கொண்டவர்களுக்கு பதிவுகள் கொடுப்பது மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் அந்த கட்சி கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!
-
கோவையில் 5 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட ‘தங்கநகை பூங்கா’! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!