Tamilnadu
டேங்கர் லாரி மீது கார் மோதி தந்தை - மகன் பலி.. விபத்து வழக்கில் ‘திடீர்’ திருப்பம் : மனைவியிடம் விசாரணை !
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் தேவராஜன். இவரது மனைவி சசிகலா வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு சிவதேவ் என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில், வெளிநாட்டுக்கு பணிக்காக சென்ற மனைவி நீண்ட வருடமாகியும் தாய்நாடு திரும்பாததால், மனைவியை இந்தியாவிற்கு வரும்படி கணவர் தேவராஜன் அழைத்துள்ளார். ஆனால், மனைவியோ இந்த வாழ்க்கையில் இருந்து தற்போது என்னால் வெளிவரமுடியாது எனக் கூறியதால், இருவருக்கும் இடையே கருத்து வேறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே கடந்த சில நாட்களாக, மனைவி வராத சோகத்தில் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார். தன் இல்லாமல் தனது மகனை யாரும் பார்த்துக்கொள்ளமாட்டார்கள் என்ற அச்சத்தில் மகனுடன் தற்கொலை செய்துக்கொள்ள நினைத்துள்ளார்.
அதன்படி மகனை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள சாலையில் காரை வேகமாக இயக்கி, டேங்கர் லாரி மீது மோதியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே தந்தை மற்றும் மகன் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனையடுத்து போலிஸார் இருவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலிஸார் விசாரணையில் ஈடுபட்டனர்.
இதில் போலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தேவராஜன் தனது தற்கொலை முடிவுக்கு மனைவி சசிகலாவே காரணம் என முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார். இதனையடுத்து போலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக தந்தை மகன் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது.
Also Read
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்! : சென்னை மாநகராட்சி தகவல்!
-
ஆதாரை ஆவணமாக ஏற்கக் கூடாது... தேர்தல் ஆணையத்துக்கு ஆதரவாக வாதிட்ட பாஜக - உச்சநீதிமன்றத்தின் பதில் என்ன?
-
"வரும் தேர்தலில் 3-ம் இடத்துக்கு விஜய்க்கும் சீமானுக்கும்தான் போட்டி" - அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி !