Tamilnadu
மாற்றுத்திறனாளி பாடகர் திருமூர்த்தியின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் கமல்.. என்ன தெரியுமா அது?
லோக்கேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் கமலஹாசனின் ‘விக்ரம்’ படம் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்று வருகிறது. மேலும் படம் வெளியாகி ஒருவாரத்திற்குள் 400 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. கிட்டத்தட்ட 5 வருடங்களுக்குப் பிறகு கமலுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய மாஸ் படமாக 'விக்ரம்' அமைத்துள்ளது. இதனால் மிகுந்த உற்சாகத்தில் கமல் உள்ளார்.
இந்த பிரம்மாண்ட வெற்றியை அடுத்துப் படத்தின் இயக்குநர் லோக்கேஷ் கனகராஜுக்கு லெக்சஸ் சொகுசு காரை பரிசாக வழங்கினார். அதேபோல், படத்தின் உதவி உதவி இயக்குநர்களுக்கும் TVS Apache RTP 160 பைக்கை பரிசாகக் கொடுத்துள்ளார்.
மேலும் விக்ரம்’ படத்தின் இறுதி காட்சியில் 2 நிமிடமே வந்தாலும் கமல் உட்பட அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார் நடிகர் சூர்யா. மேலும் இப்படத்தின் நடிகர் சூர்யாவின் கதாபாத்திரத்தின் பெயர் 'ரோலக்ஸ்'. இந்நிலையில், நடிகர் சூர்யாவிற்கு ரோலக்ஸ் கைக்கடிகாரத்தைப் பரிசாகக் கொடுத்து உற்சாகப்படுத்தியுள்ளார் நடிகர் கமல்.
இந்நிலையில், விக்ரம் படத்தில் வரும் 'பத்தல பத்தல' பாடலை மாற்றுத்திறனாளியான திரிமூர்த்தி பாடி இணையத்தில் வெளியிட்டிருந்தார். இவரின் இந்த பாடல் இணையத்தில் வைரலானது. இதைப்பார்த்த நடிகர் கமலும் திருமூர்த்தியை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.
மேலும், திருமூர்த்தியின் ஆசையைத் தெரிந்து கொண்ட கமல், அவரின் அந்த ஆசையை நிறைவேற்றியுள்ளார். அது என்னவென்றால், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்தும் KM Music Conservotoru இசைப்பள்ளியில் சேர்த்து முழு செலவையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். நடிகர் கமலின் இந்த அறிவிப்பால் திருமூர்த்தி மிகுந்த உற்சாகத்தில் உள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!