Tamilnadu
கார் மீது மோதிய லாரி.. உடல் நசுங்கி தந்தை, மகன் சம்பவ இடத்திலேயே பலி: குடும்பத்தினர் அதிர்ச்சி!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியைச் சேர்ந்த அஞ்சப்பா, அவரது மகன் கார்த்தி, புனித், ராமசந்திரா உட்பட 10 பேர் இரண்டு கார்களில் கன்னடாவில் உள்ள தர்மஸ்தலா கோயிலுக்குச் சென்றுள்ளனர்.
பின்னர் அனைவரும் அங்கிருந்து காரில் தமிழ்நாட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். ஹாசன் மாவட்டம் ஆலூர் அருகே வந்தபோது எதிரே வந்த லாரி ஒன்று இவர்கள் கார் மீது மோதியுள்ளது.
இதில், காரின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியது. இந்த இடிபாடுகளில் சிக்கி அஞ்சப்பா, அவரது மகன் கார்த்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் உயிரிழந்தவர்கள் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் படுகாயம் அடைந்தவர்களையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இந்த கோர விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
எகிப்தின் 70 நிமிட ஆதிக்கம்.. 13 நிமிடங்களில் விஸ்வரூபம் எடுத்த அர்ஜென்டினா : தொடர்கிறது மெஸ்ஸி மேஜிக்!
-
குறைதீர் முகாமில் தவெக அமைச்சர் ரமேஷ் முன் அடாவடி.. கேள்வி கேட்டவர் ஃபோனை பிடிங்கி விரட்டியடிப்பு!
-
‘வழக்கறிஞர்கள் நியமனத்தில் லஞ்சம்.. தவெக அமைச்சர்கள் மீது DVAC-க்கு பறந்த புகார் மனு’ : திமுக அதிரடி!
-
துணைவேந்தர் தேடல் குழுவில் ஆளுநரின் பிரதிநிதி… பாஜக-வுக்கு பணியும் தவெக : திமுக எம்.பி. வில்சன் கண்டனம்!
-
மக்களை மட்டுமல்ல யானைகளின் உயிரிழப்பை தடுத்தள்ள தி.மு.க- வின் தொலைநோக்கு திட்டம் : நடந்தது என்ன?