Tamilnadu
கண்டெய்னர் லாரி மீது மோதிய டெம்போ வேன்.. சம்பவ இடத்திலேயே 3 இளைஞர்கள் பரிதாப பலி!
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் அருகே பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கிருஷ்ணகிரியில் இருந்து வேலூர் நோக்கிச் சென்ற டெம்போ வேன் மோதியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் டெம்போ வேனில் வந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் உயிரிழந்த இளைஞர்கள் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தது. இந்த விபத்து குறித்து போலிஸார் விசாரணை நடத்தியதில், காட்பாடி கழிஞ்சூர் பகுதியிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு எருது விடும் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பின்னர் அங்கு இருந்து மாடுகளை ஏற்றிக் கொண்டு திரும்பிய போது விபத்து ஏற்பட்டது என தெரியவந்துள்ளது.
அதேபோல் உயிரிழந்த மூன்று இளைஞர்களும், காட்பாடி கலைஞர் பகுதியைச் சேர்ந்த தீனா,மதன், நாகராஜ் ஆகியோர் ஆவர். ஆட்டோவில் இருந்த இரண்டு மாடுகள் படுகாயம் அடைந்துள்ளன. இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“திராவிட மாடல் ஆட்சிக்கான ஒரு மாபெரும் நற்சான்றுதான் 16% வளர்ச்சி!” : அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்!
-
கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை!: டிச.18 அன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!
-
2026 சட்டமன்றத் தேர்தல் : கனிமொழி MP தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு - தி.மு.க அறிவிப்பு!
-
“VBGRAMG-க்கு எப்படி முட்டு கொடுக்கப் போகிறார் எடப்பாடி பழனிசாமி?” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
-
“Climate Action, Clean Energy ஆகிய இலக்குகளில் தமிழ்நாடு முதலிடம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!