Tamilnadu
”மக்கள் முதல்வர் என்றால் அது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்”.. இயக்குநர் செல்வராகவன் பாராட்டு!
சென்னை, டி.டி.கே. சாலை, மியூசிக் அகாடெமியில் உச்சநீதிமன்ற நீதிபதி வி. ராமசுப்பிரமணியன் முன்னிலையில் மறைந்த வழக்கறிஞர் வி. பி. இராமனின் "The Man who would not be king - V. P. Raman" (மகுடம் மறுத்த மன்னன்) என்ற சுயசரிதை புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் "மகுடம் மறுத்த மாமன்னன்" என்ற தலைப்பில் புத்தகத்தின் தமிழ் பிரதியை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் வரவேற்புரையாற்றிய செல்வராகவன், தமிழ்நாடு வளர வேண்டும் என்றால் அது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால்தான் முடியும் என பாராட்டிப் பேசியுள்ளார்.
மேலும் பேசிய இயக்குநர் செல்வராகவன்,"சிறு வயது முதலே எனக்கு மு.க.ஸ்டாலினை மிகவும் பிடிக்கும். இப்படிப்பட்ட ஒரு முதல்வர் வர மாட்டாரா என்று மக்கள் எங்கிருந்தார்கள். மக்கள் முதல்வர் என்றால் அது முக.ஸ்டாலின்தான்.
நமது தமிழ்நாடு உலகிலேயே ஒரு சிறந்த, வளர்ந்த மாநிலமாக வளர வேண்டும் என்றால் அது நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால்தான் முடியும்" என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த செல்வராகவன், ஆயிரத்தில் ஒருவன் 2 விரைவில் வரும் என்றும் முதலில் புதுப்பேட்டை 2 தான் வரும் அதற்கு பிறகுதான் ஆயிரத்தில் ஒருவன் 2 வரும் என தெரிவித்துள்ளார்.
Also Read
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!