Tamilnadu

கொடியை காட்டியபடி ரயில் முன்பு ஓடி பெரும் விபத்தை தடுத்த ‘கீமேன்’.. குவியும் பாராட்டு!

ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை ரயில்நிலையம் அருகே இருக்கும் ரயில்பாதையை இன்று காலை எட்டாவது கேங் கீமேன் வீரபெருமாள் என்பவர் வழக்கம் போல ஆய்வு செய்து வந்துள்ளார்.

அப்போது அந்த பகுதியில் தண்டவாளம் துண்டாக உடைந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அந்த நேரத்தில் சென்னை - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் அந்த பகுதியை கடக்கவிருந்தது.

rameshwaram exp

இந்த ரயிலை தூரத்திலிருந்து பார்த்த வீரபெருமாள் துரிதமாக செயல்பட்டு சிவப்பு கொடியை காட்டியபடி தண்டவாளத்தில் சுமார் 200 மீ ஓடியுள்ளார். சிவப்பு கொடியை பார்த்ததும் ரயிலின் ஓட்டுனரும் ரயிலை நிறுத்தியுள்ளார். ஆனாலும் ரயிலின் இன்ஜின் பகுதி மட்டும் உடைந்த தண்டவாள பகுதியை கடந்து நின்றுள்ளது.

இதைத் தொடர்ந்து உடைந்த பகுதியில் புஷ் பிளேட் பொருத்தி இணைக்கப்பட்டு ஒரு மணிநேரம் தாமதமாக ரயில் ராமேஸ்வரம் புறப்பட்டு சென்றது.

ஒருவேளை ரயில் வேகமாக இந்த உடைந்த தண்டவாளத்தை கடந்து சென்றிருந்தால் ரயில்தடம் புரண்டு பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும் அபாயமும் இருந்த நிலையில், ரயில் விபத்தை தடுத்த கீமேன் வீரப்பெருமாளை ரயில்வே ஊழியர்களும், பொது மக்களும் பாராட்டி வருகின்றனர்.

Also Read: 13 வழக்கு.. 24 ஆண்டுகளாக தலைமறைவு.. போலிஸிடம் சிக்காமல் தப்பிய குற்றவாளி பிடிபட்டது எப்படி ?