Tamilnadu
4 வயது குழந்தையை அடித்த தந்தை.. பயந்து ரம்பர் தோட்டத்திற்குள் ஓடியபோது பாம்பு கடித்து பரிதாப பலி!
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குட்டைக்குழி அடுத்த குட்டைக்காடு பாலவிளை பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்திரன். கூலிதொழிலாளியான இவருக்கு சிஜிமோள் என்ற மனைவியும், சுஷ்விகா மோள் என்ற 4 வயது பெண் குழந்தையும், சுஷ்வின்சிஜோ, சுஜிலின் ஜோ என்ற இரண்டு சிறுமிகளும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு குடித்து விட்டு வீட்டிற்கு வந்த சுரேந்திரன், மனைவி மற்றும் குழந்தைகளை அடித்துள்ளார். இதில் பயந்த குழந்தைகள் அருகே இருந்த ரப்பர் தோட்டத்திற்குள் ஓடியுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக 4 வயது குழந்தையான சுஷ்விஷா மோளை விஷபாம்பு ஒன்று கடித்துள்ளது. இது குறித்து குழந்தைகள் அழுதுகொண்டே பெற்றோரிடம் கூறியுள்ளது.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே குழந்தையை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!