Tamilnadu
பேருந்தை முந்தும்போது நடந்த விபரீதம்.. சக்கரத்தில் சிக்கி நண்பர்கள் 2 பேர் பரிதாப பலி!
கோவை மாவட்டம், சிறுவாணி சாலையில் வாலிபர் ஒருவர் தனது தோழியுடன் இருசக்கர வாகனத்தில் பேரூர் நோக்கிச் சென்று கொண்டு இருந்தார் . அப்போது முன்னாள் சென்ற பேருந்தை வாலிபர் முந்தி செல்ல முயன்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இந்த விபத்து குறித்து அறிந்த போலிஸார் சம்பவ இடத்திற்கு இருவரது உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், உயிரிழந்த வாலிபர் செளரிபாளைய பகுதியைச் சேர்ந்த மனோஜ் என்பதும், உடன் வந்த இளம்பெண் பூலுவப்பட்டி அகதிகள் முகாமை சேர்ந்த ஆர்த்தி (19) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலிஸார் இந்த விபத்து குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் வாலிபரும், அவரது தோழியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
‘பெரியார் விருது’ பெறும் கனிமொழி எம்.பி! : தி.மு.கழக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !