தமிழ்நாடு

தண்ணீர் பானைக்குள் விழுந்து 1¼ வயது குழந்தை பரிதாப பலி.. இலங்கை மறுவாழ்வுமையத்தில் நடந்த சோகம்!

திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை இலங்கை தமிழர் மறுவாழ்வுமையத்தில் தண்ணீர் பானைக்குள் விழுந்து ஒரு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தண்ணீர் பானைக்குள் விழுந்து 1¼ வயது குழந்தை பரிதாப பலி.. இலங்கை மறுவாழ்வுமையத்தில் நடந்த சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை இலங்கை தமிழர் மறுவாழ்வு மையம் சேர்ந்தவர் மதியழகன். 1¼ வயதாகும் இவரது மகன் ஹரிஷ் தண்ணீர் பானைக்குள் விழுந்த சோப்பை எடுப்பதற்காக குனிந்தபோது தலைகீழாக கவிழ்ந்து உள்ளான்.

அதனை ஹரிஷ் குடும்பத்தினர் கவனிக்கவில்லை. சற்று நேரம் கழித்து வந்து பார்த்தபோது ஹரிஷ் தண்ணீருக்குள் தலைகீழாக கவிழ்ந்து உள்ளது தெரியவந்தது. உடனடியாக ஹரிஷை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஹரிஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறி உள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்திற்கு ஹரிஷ் உடன் எடுத்து சென்று விட்டனர். இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

banner

Related Stories

Related Stories