Tamilnadu
Free Fire கேம் Password-ஐ நண்பர்கள் திருடியதால் விரக்தி : WhatsApp Status வைத்து இளைஞர் தற்கொலை!
கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் சஞ்சய்.இளைஞரான இவர் கேட்டரிங் படிப்பை இடை நிறுத்தம் செய்து விட்டு அவ்வப்போது கிடைக்கும் வேலையைச் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர், இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ததில் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. சஞ்சய் Free fire ஆன்லைன் கேம் விளையாடி வந்துள்ளார்.
மேலும் Free fire கேம் password-ஐ அவரது நண்பர்கள் திருடியதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் தொடர்ந்து கேம் விளையாடி வந்ததால் அவரது பெற்றோர் கண்டித்து வந்துள்ளனர். இதனால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
அதேபோல், தற்கொலைக்கு முன்பு சஞ்சய் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் யாரும் விளையாட்டுக்கு அடிமையாக வேண்டாம்.ஒரு லட்சம் ரூபாய் தான் இழந்துவிட்டதாகவும் பதிவிட்டுள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலிஸார் சஞ்சய் தற்கொலை குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!
-
சூழ்ந்த மக்கள்.. செய்தி சேகரித்த பத்திரிகையாளர்.. மிரட்டிய தவெக அமைச்சரின் ஆதரவாளர்.. வைரலாகும் வீடியோ!
-
தொகுதி மறுவரையறை கூட்டம் எதற்காக? ; தவெக அரசை இயக்குவது? : அடுக்காடுக்காக கேள்விகளை எழுப்பிய கனிமொழி MP!
-
ஆபத்தான FCRA சட்டம் : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு கோரிக்கை வைத்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!