Tamilnadu
ஜிம்மில் சுருண்டு விழுந்த IT இளைஞர்.. மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது காத்திருந்த அதிர்ச்சி!
மதுரை மாவட்டம், பழங்காநத்தம் திருவள்ளூவர் நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீவிஷ்ணு. IT நிறுவனத்தில் வேலைபார்த்து வரும் இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக மாடக்குளம் பகுதியில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்து வந்தார்.
இந்நிலையில், ஸ்ரீவிஷ்ணு வழக்கம்போல் உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஸ்ரீவிஷ்ணு ஏற்கனவே இறந்து விட்டதாகவும், வருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபகாலமாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது மாரடைப்பு ஏற்பட்டு இளைஞர்கள் பலர் இறக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டுகூட கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!