Tamilnadu
”கலைஞர் வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்”.. இளையராஜா புகழாரம்!
கோவை கொடிசியா மைதானத்தில் இளையராஜா கச்சேரி நடந்தது. இதில் கலைஞர் வழியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியை வழிநடத்திச் செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது என இளையராஜா பாராட்டி பேசியுள்ளார்.
இந்நிகழ்வில் பேசிய இளையராஜா,"எனது அப்பா எனக்கு வைத்த பெயர் ஞானதேசிகன். பின்னர் பள்ளியில் என்பெயரை ராஜய்யானு மாத்திட்டாங்க. பிறகு மியூசிக் மாஸ்டர் ராஜய்யா என்ற பெயர் நல்லா இல்லை ராஜானு வச்சிக்க சொல்லி மாத்திட்டாரு. பிறகு ராஜா என்ற பெயர்தான் நீண்ட நாள் இருந்தது.
அப்புறம் பட வாய்ப்பு வந்தபோது பஞ்சு அருணாசலம் இளையராஜானு என் பெயரை மாத்திட்டாரு. அதிலிருந்து நான் இப்போது வரை இளையராஜாதான். ஆனா கலைஞர் ஐயாதான் அப்பா வெச்ச ஞானதேசிகன்னு பேர்ல இருந்து ஞானத்தை எடுத்து 'இசைஞானி' என்ற பட்டத்தை அறிவித்தார்.
என் தந்தை வைத்த பெயர் அவருக்கு எப்படி தெரிந்தது என்று நான் விழந்தேன். அதுதான் தலைவருடைய சிறப்பு. என் தந்தைக்குச் சமமானவர் கலைஞர். கலைஞர் வழியில் தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!