Tamilnadu
மாணவிகள் முன்பு நிர்வாணமாக நின்ற இந்து மக்கள் கட்சி நிர்வாகி.. தட்டி தூக்கிய போலிஸ் !
திருச்சி பொன்னமலையில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் அருகே மர்ம நபர் ஒருவர் திடீரென பள்ளி மாணவிகள் முன்பு நிர்வாணமாக நின்றுள்ளார். அந்த நபரின் அநாகரீகமான செயலால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் அங்கிருந்து வகுப்பறைகளுக்கு ஓடிச்சென்றுள்ளனர்.
பின்னர் இது குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். பின்னர் மாணவிகளின் பெற்றோர் அந்த நபர் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து நிர்வாண நபரைக் கைது செய்து விசாரணை செய்தனர்.
இதில் அந்த நபர் ராஜ்குமார் என்றும், இந்து மக்கள் கட்சியின் திருச்சி மாவட்ட பொதுச் செயலாளர் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து மேலும் அவரிடம் போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!