Tamilnadu
‘சாதி, மதம் கிடையாது..’ தனது மகளுக்கு ‘NO Caste’ சான்றிதழ் வாங்கி அசத்திய கோவை தம்பதி!
இந்தியாவில்சாதி சான்றிதழ் அவசியமான ஒன்றாகக் கருதப்பட்டு வருகிறது. இதற்குக் காரணம் கல்வியில் உதவித் தொகை, வேலைவாய்ப்பு, அரசு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு என பலவற்றிற்கும் சாதி சான்றிதழ் தேவைப்படுகிறது. இதனால், குழந்தைகள் பிறந்த உடனே பெற்றோர்கள் சாதிச் சான்றிதழ்களை வாங்கி வைத்துவிடுவர்.
இந்நிலையில் கோவையைச் சேர்ந்த பெற்றோர் ஒருவர், தங்களின் மூன்றரை வயது குழந்தைக்கு சாதி, மதம் இல்லாமல் சான்றிதழ் பெற்றுள்ளது அனைவர் மத்தியிலும் கவனத்தைப் பெற்றுள்ளது.
கோவையைச் சேர்ந்தவர் நரேஷ் கார்த்திக். இவர் தனது மகளை பள்ளியில் சேர்க்க சென்றபோது, சாதி சான்றிதழியில் அவர்கள் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்படவில்லை. இதனால் இவரால் மகளை பள்ளியில் சேர்க்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார்.
இதையடுத்து கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் தனது மகளுக்கு சாதி, மதம் இல்லாமல் சான்றிதழ் கொடுக்க வேண்டும் என விண்ணப்பித்துள்ளார். பின்னர் தாசில்தார் அவரது விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு சாதி, மாதம் குறிப்பிடப்படாமல் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து நரேஷ் கார்த்திக் கூறுகையில்,1973ம் ஆண்டே தமிழ்நாடு அரசே பள்ளி சேர்ப்பதற்கான விண்ணப்பத்தில் சாதி, மதம் குறிப்பிட தேவையில்லை என அரசாணை பிறப்பித்துள்ளது. இருந்தாலும் உதவித்தொகை உள்ளிட்ட காரணங்களுக்காக சாதி சான்றிதழ் கேட்கின்றனர்.
சாதி, மதம் ஒழிந்தால் மட்டுமே மக்களிடம் ஏற்றத்தழ்வு நீங்கும். இதனாலேயே தனது மகளுக்கு சாதி, மதம் இல்லாத சான்றிதழ் வாங்க வேண்டும் என முடிவு செய்து சான்றிதழ் பெற்றுள்ளேன். வேலைக்காக விண்ணப்பிக்கும்போது no cast என்ற பிரிவையும் சேர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Also Read
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!