Tamilnadu

“கோயில் பெயரை பயன்படுத்தி ரூ.50 லட்சம் மோசடி” : பா.ஜ.க ஆதரவாளரான YouTuber கார்த்திக் கோபிநாத் கைது!

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான திருக்கோவில் பெயரை பயன்படுத்தி இணையதளம் மூலம், ரூ.50 லட்சம் பணம் வசூல் செய்த ‘இளைய பாரதம்’ யூடியூப் சேனல் நடத்திவரும் கார்த்திக் கோபிநாத் என்பவர் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு அரசுக்கு எதிராக அவதூறு வீடியோ வெளியிட்ட வழக்கு மற்றும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சிறுவாச்சூர் திருக்கோயில் பெயரை வைத்து 50 லட்ச ரூபாய் வரை பணம் வசூல் செய்த மோசடி செய்த விவகாரத்தில், இந்து சமய அறநிலையத்துறை ஏற்கனவே நோட்டீஸ் வழங்கியிருந்தது.

இந்நிலையில் ஆவடி மிட்டனமல்லியில் உள்ள ஸ்டுடியோவில் வைத்து யூடுபார் கார்த்திக் கோபிநாத் என்பவரை ஆவடி காவல் ஆனையரக மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள், மற்றும் உதவி ஆணையர் கந்தக்குமார் ஆகியோர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கார்த்திக் கோபிநாத் தனது சொந்த செலவில் சிலைகளை சீரமைத்து தருகிறேன் என அறநிலையத்துறைக்கு விண்ணப்பம் வழங்கிவிட்டு, பொது மக்களிடம் நன்கொடை வசூல் செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இதனிடையே மதுரகாளியம்மன் கோவில் நிர்வாகம் மற்றும் அறநிலையத் துறை சார்பில் கார்த்திக் கோபிநாத் வக்கீல் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில், கோவில் சீரமைப்பு செய்வதாக கூறி வசூல் செய்த பணத்தை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். ஒருவேளை பெற்ற பணத்தை ஒப்படைக்கவில்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளனர்.

Also Read: ”நான் ஒரு இந்து.. விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன்”: இந்துத்வா கும்பலுக்கு சித்தராமையா பதிலடி!