Tamilnadu
“சூனியம் வைத்ததாக எண்ணி, அண்ணியின் குடும்பத்தை தீர்த்து கட்டிய இளைஞர்” : சினிமாவை மிஞ்சும் கொலை சம்பவம்!
காஞ்சிபுரம் மாவட்டம் புஞ்சை அரசந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர்கள் மாணிக்கம் - ராணி தம்பதி. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில், மூத்த மகள் சசிகலாவை, திருத்தணி நாட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சாய்ராம் என்பவருக்கு திருமணம் செய்துக்கொடுத்துள்ளனர்.
சில ஆண்டுகள் சசிகலா - சாய்ராம் ஒன்றாக வாழ்ந்த நிலையில், அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்துவேறுபாடுக் காரணமாக, கணவரைவிட்டு பிரிந்து, சசிகலா தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் இரு குடும்பங்களிடையே அடிக்கடி சண்டை மூண்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 23ம் தேதி அரக்கோணம் அருகே உள்ள ஏரிக்கரையில், மாணிக்கமும், அவரது மனைவி ராணியும் கொலைய்யட்டப்பட்டு கிடந்ததாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலிஸார், உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலிஸார் விசாரணை நடத்தியதில், திருத்தணியைச் சேர்ந்த கூலிப்படையைச் சேர்ந்தவர் இக்கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து கூலிப்படையைச் சேர்ந்த சுனில்குமார் என்பவரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், சாய்ராமின் தம்பி தரணி என்பவர்தான் கொலை செய்ய சொன்னதாக வாக்குமூலம் அளித்தார். அதனைத்தொடர்ந்து மேலும் கூலிப்படையைச் சேர்ந்த 2 பேரை கைது செய்த போலிஸார், தரணியையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் தரணி அதிர்ச்சி தகவலை தெரிவித்திருக்கிறார். அவர் அளித்த வாக்குமூலத்தில், அண்ணி சசிகலா பிரிந்துச் சென்றபிறகு, அண்ணன் உடல் நிலை பாதிக்கப்பட்டது. வீட்டில் சொத்து பிரச்சனையில் அண்ணியின் குடும்பத்தின் தலையீடு இருந்தது. அதுமட்டுமல்லாது, அண்ணனுக்கு அண்ணியின் குடும்பத்தினர் சூணியம் வைத்ததாக உறவினர்கள் கூறினார்கள்.
அதனால், அண்ணியின் குடும்பத்தை பழிவாங்க, மாணிக்கம் - ராணியை கடத்திச் சென்று கொலை செய்ததாக தெரிவித்தார். இந்த கொலை வழக்கில் தரணி உட்பட 3 பேரை கைது செய்த போலிஸார், மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். குடும்பப் பிரச்சனையில் சூணியம் வைத்ததாக எண்ணி, அண்ணியின் குடும்பத்தை கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!