Tamilnadu
“அபாயகர - அடிமை சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை பாதுகாத்திட வேண்டும்”: தீர்மானம் நிறைவேற்றியது தி.மு.கழகம்!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க மாவட்டக் கழகச் செயலாளர்/பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தக்கூட்டத்தில், இந்தக்கூட்டத்தில், “ஜூன் - 3” - முத்தமிழறிஞர் கலைஞரின் 99-ஆம் பிறந்தநாளை சிறப்பாக நடத்திடுவோம் என தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்/பொறுப்பாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் மற்றொரு தீர்மானத்தில், “தேச விரோத - அபாயகர சக்திகள், அவர்களுக்குத் துணை போகும் அடிமைகளையும், விலை போகும் வீணர்களிடமிருந்து தாய்த் தமிழ்நாட்டை எந்தவித சேதாரமும் இன்றி, பாதுகாத்திட வேண்டும்!” என வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தீர்மானம் பின்வருமாறு :- தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர், தங்கள் அயராத உழைப்பாலும், தமது குருதி - வியர்வையைக் கொட்டியும், பண்படுத்தி வைத்துள்ள தமிழ் நிலத்தில், சமூகநீதியும் மதநல்லிணக்கமும் செழித்துச் சிறந்திருப்பதைப் பார்த்துப் பொறுத்துக் கொள்ள இயலாமல்; மதவாத நச்சு விதைகளைத் தூவிட எத்தனிக்கும், தேச விரோத - அபாயகர சக்திகளையும், அவர்களுக்குத் துணை போகும் அடிமைகளையும், விலை போகும் வீணர்களையும் அடையாளம் காட்டி, அவர்களிடமிருந்து தாய்த் தமிழ்நாட்டை எந்தவித சேதாரமும் இன்றி, பாதுகாத்திட வேண்டும்.
மேலும் புதிய பட்டாளத்து சிப்பாய்களின் அணிவகுப்பை உருவாக்கிடும் வகையில், ‘திராவிட மாடல் பயிற்சிப் பாசறை’க் கூட்டங்களை வெற்றிகரமாகவும் தொடர்ச்சியாகவும் நடத்தி, முதல்வர் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கு அரணாக நிற்க வகை செய்வோம் எனக் கழக மாவட்டச் செயலாளர்கள்/ பொறுப்பாளர்களின் இந்தக் கூட்டம் ஒருமனதாகத் தீர்மானம் செய்து உறுதி ஏற்கிறது!” எனத் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
சூழ்ந்த மக்கள்.. செய்தி சேகரித்த பத்திரிகையாளர்.. மிரட்டிய தவெக அமைச்சரின் ஆதரவாளர்.. வைரலாகும் வீடியோ!
-
தொகுதி மறுவரையறை கூட்டம் எதற்காக? ; தவெக அரசை இயக்குவது? : அடுக்காடுக்காக கேள்விகளை எழுப்பிய கனிமொழி MP!
-
ஆபத்தான FCRA சட்டம் : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு கோரிக்கை வைத்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“ஜிஎஸ்டி அமலுக்கு பிறகு மாநிலங்களின் நிதிசார் சுயாட்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது!” : தங்கம் தென்னரசு!
-
“தொகுதி மறுவரையறையை நிச்சயம் எதிர்ப்போம்! அதில் எள்ளளவும் மாற்றம் இல்லை!” : கனிமொழி எம்.பி திட்டவட்டம்!