Tamilnadu
4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - இளைஞருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை: மகிளா நீதிமன்றம் அதிரடி!
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள காக்கில்சிக்கையன்பட்டியை சேர்ந்தவர் அகமது மீரான் (21). இவர் கடந்த 2020ஆம் ஆண்டு 4 வயது சிறுமிகளுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் உத்தமபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இளைஞர் அகமது மீரானை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று தேனி மகிளா நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூபாய் 5,000 அபராதமும், அதை செலுத்தத் தவறினால் கூடுதலாக 1வருட மெய்க்காவல் சிறை தண்டனையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி சாந்தி செழியன் தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக மாநில அரசு ரூபாய் 3லட்சம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
Also Read
-
“ஒருவேளை விஜய் வட இந்தியாவில் பிறந்திருந்தால்...” - கழக மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி தாக்கு!
-
முதலமைச்சருக்கு நன்றி : 'நான் முதல்வன் திட்டத்தில் பயின்று இஸ்ரோவுக்கு செல்லும் அரசுப்பள்ளி மாணவர் !
-
நிதி நிறுவன மோசடி... பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு !
-
அகமதாபாத் விமான விபத்து : விபத்துக்கு விமானிகள் காரணம் என்பதை ஏற்கமுடியாது... விமானிகள் சங்கம் காட்டம் !
-
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை... வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!