Tamilnadu
“இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முன்னிலை.. ஆனால்”: பிரதமர் முன் புள்ளி விவரங்களை அடுக்கி பேசிய முதலமைச்சர் !
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரதமர் மோடி இன்று சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் 31,400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாட்டிற்கான திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் முன்னிலை வகித்துப் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தமிழ்நாடு பல்வேறு வகையிலும் நாட்டின் முன்னணி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. பொருளாதாரம், மருத்துவம், வேளாண்மை என பல்வேறு வகையில் நாட்டின் வளர்ச்சிக்குத் தமிழ்நாடு பங்களிப்பு அளித்து வருகிறது. இது மட்டுமல்லாமல் சமூகநீதி, பெண்கள் முன்னேற்றம், சமத்துவம் என அனைத்தையும் உள்ளடக்கியதுதான் தமிழ்நாட்டின் வளர்ச்சி.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 9.22 விழுக்காடு, ஒன்றிய அரசின் மொத்த வரிவருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6 விழுக்காடு, இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 8.4% உள்ளது.
ஜவுளித்துறை ஏற்றுமதியில் 19,4 விழுக்காடு, கார்கள் ஏற்றுமதியில் 32,5 விழுக்காடு. ஆனால் ஒன்றிய அரசின் வரி வருவாயில் பகிர்ந்து அளிக்கப்படுவது 1.1 விழுக்காடு மட்டுமே. என தமிழ்நாடு போன்று நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிப்பு அளிக்கும் மாநிலங்களுக்குத் தனது பங்களிப்பை ஒன்றிய அரசு அளிக்க வேண்டும். அதுதான் உண்மையான கூட்டுறவு கூட்டாட்சியாகும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“விஜய் போனது சக நடிகரை ஐஸ் வைக்கத்தானே தவிர முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல!” : முரசொலி தலையங்கம்!
-
“வரலாற்றிலேயே இல்லாத டம்மி முதலமைச்சர்.. ஸ்டிக்கர் ஒட்டி பொய் பரப்புகின்றனர்” : உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
“ஸ்டிக்கர் ஒட்டாமல் புதிய முதலீடுகளை ஈட்டுவாரா முதலமைச்சர்?” : டி.ஆர்.பி.ராஜா கேள்வி!
-
“முதல்வருக்கு நாக்கில் நிதானம் வேண்டும்.. சட்டமன்றத்தில் கண்ணியம் இல்லை”: திருச்சி சிவா எம்.பி கண்டன உரை!
-
முதலமைச்சர் விஜய் தொகுதியின் அவலம்.. 6 நாட்களாக தண்ணீர் இல்லை.. கோபத்துடன் வீதியில் இறங்கிய மக்கள்!