Tamilnadu
பாலியல் உறவுக்கு இணங்கும்படி தாய், மகளுக்கு கத்தி முனையில் மிரட்டல்.. அதிரடி காட்டிய மாதவரம் போலிஸ்!
சென்னை மாதவரம் பால்பண்ணை அருகே 52 வயது பெண் தன் மகளுடன் தனியே வசித்து வருகிறார்.
கடந்த மாதம் 19ஆம் தேதி நள்ளிரவில் இவரின் வீட்டின் கதவை மர்ம நபர் எட்டி உதைத்து திறந்து தான் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி தாய், மகள் இருவரில் யாராவது ஒருவரை பாலியல் உறவுக்கு இணங்கும்படியும் இல்லாவிட்டால் இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
உடனே சுதாரித்துக் கொண்ட மூதாட்டியின் மகள் வெளியே சென்று கூச்சலிட்டார் இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர் அக்கம்பக்கத்தினர் வந்ததால் இருவரையும் தாக்கிவிட்டு தப்பிச் சென்றார்.
இதுகுறித்து மாதவரம் பால்பண்ணை போலீசில் புகார் அளித்ததின் பேரில் மாதவரம் பால்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து அதில் சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில் சென்னை கொடுங்கையூர் பகுதி என் எஸ் கே தெருவில் அரிசி கடை நடத்தும் ராஜேஷ் வயது 26 என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Also Read
-
“அடையாற்றை சீர்படுத்துவதற்காக ரூ.1,500 கோடியில் திட்டம்!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
வாக்கு திருட்டு : ஒரு போலி விண்ணப்பத்திற்கு ரூ.80 - சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் அம்பலம்!
-
திராவிட மாடலில் உழவர்கள் பெற்ற நலன்! : வேளாண் திட்டங்களை பட்டியலிட்ட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!
-
112 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிப்பு : ஒன்றிய அரசின் அதிர்ச்சி தகவல்!
-
பீகார் தேர்தல் : இந்தியா கூட்டணி முதலமைச்சர் வேட்பாளர் யார்? - வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!