Tamilnadu

“சேலம் மாவட்டத்தில் இந்த ஓராண்டில் மட்டும்..”: பயனடைந்தோர் விவரங்களை அடுக்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

சேலம் மாவட்டம், ஆத்தூரில் தி.மு.க அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க தலைவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "சேலம் மாவட்டத்துக்குச் செய்த சாதனைகளைச் சொல்வதற்கே நேரம் போதாது. சேலம் மாவட்டத்தில் மட்டும் இந்த ஓராண்டில் பயனடைந்தவர்களைப் பற்றி இப்போது சொல்கிறேன்.

முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ் 23,965 பேரின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்குக் கீழ் நகைக்கடன் பெற்ற 1.45 லட்சம் பேரின் 438கோடி மதிப்பிலான கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

5.94 கோடி தடவைகள், பெண்கள் இலவசப் பேருந்து பயணம் மேற்கொண்டுள்ளார்கள். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 7.16 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுள்ளார்கள்.பால் விலைக் குறைப்பின் மூலமாக 2.75 லட்சம் பேர் பயனடைந்துள்ளார்கள்.

3963 பேர் இலவச மின் இணைப்பு பெற்றுள்ளார்கள்.10.19 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் கொரோனா நிவாரண நிதி பெற்றுள்ளார்கள். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் நாள் இதே ஆத்தூருக்கு வருகை தந்த நான் புதிதாஅக் 13 பணிகளைத் தொடங்கி வைத்தேன்.

அன்றைய தினமே மரவள்ளி விவசாயிகளுடனும் - ஜவ்வரிசி உற்பத்தி நிறுவனத்தைச் சார்ந்தவர்களுடனும் கலந்துரையாடல் நடத்தினேன். சேகோசரில் கட்டப்பட்ட மின்னணு ஏலமையத்தையும் நேரடி விற்பனை முனையக் கட்டடத்தையும் திறந்து வைத்தேன். கடந்த டிசம்பர் மாதம் சேலத்துக்கு வந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டேன்” என தெரிவித்துள்ளார்.

Also Read: “மதத்தை வைத்து அரசியல் நடத்துபவர்கள் நியாயமாக ஆதரித்திருக்க வேண்டும்; ஆனால்..” : முதல்வர் சரமாரி பதிலடி!