Tamilnadu
வீட்டில் தற்கொலை செய்து கொண்ட காதலன்.. 3 மாதம் கழித்து அதே வீட்டில் காதலி எடுத்த விபரீத முடிவு!
கள்ளக்குறிச்சி மாவட்டம், சிறுவங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாதுரை. இவரது மகள் சுதா. இவர் நூரோலை கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் என்பவரைப் பள்ளி படிக்கும்போது இருந்தே காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஆகாஷ் தனது வீட்டில் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் சுதா வீட்டை விட்டு வெளியே செல்லாமல் கடும் மனை உளைச்சலில் இருந்துள்ளார்.
பின்னர், மகளின் நிலையைப்பார்த்த அவரது பெற்றோர் அவருக்குத் திருமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ளனர். இதனை அறிந்த சுதா, தான் காதலன் வீட்டிற்கே சென்று தங்குவதாகப் பெற்றோரிடம் கூறிவிட்டு அங்குச் சென்று தங்கி வந்தார்.
இந்நிலையில் சுதாவும் காதலன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்குச் சுதா சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த காதலன் வீட்டிலேயே காதலி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!
-
3.5 லட்ச அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக.. காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைக்கும் முதல்வர்!
-
ஒன்றிய அரசின் கருப்பு சட்டத்தை எதிர்ப்போம்: இரகுமான் கான் நூல்கள் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் சூளுரை!