Tamilnadu
ஊருக்குத் திரும்பும் போது நடந்த விபரீதம்.. சகோதரர்களுக்கு நேர்ந்த துயரம்: உறவினர்கள் சோகம்!
மதுரை களிமங்கலத்தைச் சேர்ந்தவர்கள் நியாஸ் லக்மான், இஜாஸ் முகம்மது. சகோதரர்களான இவர்கள் இருவரும் மேலூர் அருகே உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.பின்னர் அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் இருவரும் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
இதையடுத்து அவர்களது வாகனம் வஞ்சி நகரம் நான்கு வழிச்சாலையில் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இந்த விபத்தில் சாலையில் தூக்கி வீசப்பட்ட சகோதரர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் இருவரது உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சாலை விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் சகோதரர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
தினமலரின் பொய் செய்தி! - அங்கன்வாடி மையங்கள் குறித்து விளக்கிய தமிழ்நாடு அரசு!
-
சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மாபெரும் சாதனைகள்... பட்டியலை வெளியிட்டு தமிழ்நாடு அரசு பெருமிதம்!
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !