Tamilnadu
காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம்.. ஆத்திரத்தில் புதுமாப்பிள்ளைக்கு கத்தி குத்து !
புதுக்கோட்டை மாவட்டம், வேந்தன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டிமணி. இவர் சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து தனது மகளுக்குப் பாலமுருகன் என்பவருக்குத் திருமண நிச்சயம் செய்துள்ளனர். இது பற்றி அறிந்த பாண்டிமணி, காதலியின் பெற்றோர் மீது கோபத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில், பாலமுருகன் வருங்கால மனைவியுடன் புகைப்படம் எடுப்பதற்காக வேந்தன்பட்டியில் உள்ள ஸ்டுடியோ ஒன்றிற்கு வந்துள்ளார். அப்போது அங்குத் தனது நண்பர்களுடன் பாண்டிமணியும் வந்துள்ளார். இதையடுத்து பாண்டிமணிக்கும், பாலமுருகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாண்டிமணி தான் மறைத்து எடுத்து வந்திருந்த கத்தியை எடுத்து பாலமுருகன் மற்றும் அவருடன் வந்த நண்பரைச் சரமாரியாகக் குத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
இதனிடையே அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள பாண்டி மணியையும் அவரது நண்பர்களையும் தேடி வருகின்றனர். காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்ததால் ஆத்திரத்தில் காதலன், புது மாப்பிள்ளையை கத்தியால் குத்திய சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!
-
“அதிமுகவின் வாக்குறுதிகளுக்கு வாய் இருந்தால் கதறி அழுதிருக்கும்..” - பட்டியலிட்டு அமைச்சர் ரகுபதி தாக்கு!