Tamilnadu
கொடுத்த பணத்தைத் திருப்பி கேட்டதால் ஆத்திரம்.. பாட்டியின் கழுத்தை அறுத்த கொடூர பேரன்!
கோவை மாவட்டம், தெலுங்கு பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இளைஞரான இவரது தாய் இறந்து விட்டதாலும், தந்தை காணாமல் போனதாலும் இவர் தனது பாட்டியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கார்த்திக்கு சிறு விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.
அப்போது, பாட்டி மீனாவிடம் 'அவசரமாகப் பணம் தேவைப்படுகிறது யாரிடமாவது வாங்கி கொடுங்கள், நான் கொடுத்துவிடுகிறேன்' என கூறியுள்ளார். இதனால் பாட்டி ரூ15 ஆயிரம் கடனாக வாங்கி அதை தனது பேரனிடம் கொடுத்துள்ளார். ஆனால், கார்த்திக் சொன்னபடி பணத்தைத் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் பாட்டிக்கும், பேரனுக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று பாட்டி மீனா, பேரனிடம் கடனாகக் கொடுத்த பணத்தைக் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கார்த்தி சொந்த பாட்டி என்றும் பாராமல் அவரது கழுத்தை அறுத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர் ரத்த வெள்ளத்திலிருந்த மீனாவை அருகே இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்துள்ளனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த கார்த்திக்கை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“கலைஞரின் வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
-
‘தலைவர்’ இல்லாமல் இயங்கும் தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! : திருச்சி சிவா எம்.பி கண்டனம்!
-
“மெட்ரோ திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக அரசு!”: திமுக எம்.பி கிரிராஜன் கண்டனம்!
-
‘பொருநை’ அருங்காட்சியகப் பணிகள் 97% நிறைவு! : டிச.21 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!