Tamilnadu
“ஆளுநர் முடிவு எடுக்காதது ஏன்? - ஒன்றிய அரசு ஆஜராவது ஏன் ?” : பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி பேரறிவாளன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது.
முன்னதாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, நீதிபதிகள், பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடு பற்றி உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்த வழக்கு விசாரணையில் நீதிபதிகள் பேசும் போது, மாநில அரசு அனுப்பக் கூடியே பரிந்துரைகளைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது? என கேள்வி எழுப்பினர்.
மேலும், ஆளுநர் முடிவு எடுக்கும் அதிகாரம் பற்றி ஒவ்வொரு கோப்பையும் ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும் என்று எங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநரின் பதில் ஒவ்வொரு முறையும் முரணாகவே உள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
பின்னர் ஆளுநர், குடியரசுத் தலைவர்களின் அதிகாரிங்களுக்குள் போகாமல் நாங்களே ஏன் விடுவிக்கக் கூடாது?. மாநில அரசுகளின் ஒவ்வொரு முடிவுக்கும் ஆளுநர் எதிராக இருந்தால் அது கூட்டாட்சி அமைப்பில் மிகப்பெரிய பாதகத்தை ஏற்படுத்தும். பேரறிவாளனை விடுவிப்பது குறித்து தனது நிலைப்பாட்டை ஒருவாரத்திற்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என கேடு விதித்து உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது, ஒன்றிய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் நடராஜ் ஆஜரானார். அப்போது பேசிய கூடுதல் சொலிசிட்டர் பேரரிவாளனை விடுவிப்பது குறித்து குடியரசு தலைவர்தான் முடிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார். வாதத்தை கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் ஆளுனர் என்ன முடிவு எடுத்துள்ளார்? 2,3 ஆண்டுகளாக ஆளுநரிடம் இருக்கிறது. விரைவில் ஆளுநர் முடிவு எடுப்பார் என்று கடந்த முறை கூறிய நிலையில் ஆளுநரின் முடிவு என்ன ஆனது? என கேள்வி எழுப்பினர்.
மேலும், ஆளுநர் மாநில அரசின் தலைவர். அப்படி இருக்கும் போது அவருக்காக ஒன்றிய அரசு ஆஜராவது ஏன்?. ஆளுநர் உயர் பதவி வகிப்பதால் நாங்கள் கூடுதலாக எதுவும் கூற விரும்பவில்லை. எல்லா குற்றங்களுக்கும் கருணை மனு மீது குடியரசு தலைவர்தான் முடிவு எடுக்க முடியும் என்பது போல் ஒன்றிய அரசின் வாதம் உள்ளது.
14 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவிப்பவர்களை அரசியல் சாசன சட்டம் 72 படி குடியரசு தலைவரும், 161 படி ஆளுனரும் விடுவிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்பளித்துள்ளது. இந்த வழக்கில் ஆளுனர் ஏன் முடிவு முடியாது என்பதுதான் கேள்வி என நீதிபதிகள் சாடினார்கள்.
இந்த வழக்கில் ஆளுனரின் அதிகாரம் குறித்த முந்தைய உச்ச நீதிமன்ற தீர்புகளை தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் படித்துக் காண்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!
-
TVK Fails... ! ஆட்சியே அமைக்கவில்லை அதற்குள் : த.வெ.க-வினரின் மூன்று சம்பங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி!