Tamilnadu
“இந்தி மொழியை கட்டாயமாக்க உத்தரவு - ஜிப்மரில் இந்தி எதிர்ப்பு போராட்டம்” : தி.மு.க.வினர் 1,000 பேர் கைது!
புதுச்சேரியில் இயங்கி வரும் ஒன்றிய அரசின் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இனி வரும் காலங்களில் அலுவல் ரீதியான பயன்பாட்டை இந்தியில் மாற்றுவது தொடர்பாக புதிய சுற்றறிக்கையை புதுச்சேரி ஜிம்பர் இயக்குநர் பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஒன்றிய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் அலுவல் மொழியாக இந்தியை கட்டாயமாக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த உத்தரவை திரும்ப வலியுறுத்தியும் புதுச்சேரி தி.மு.க சார்பில் ஜிப்மர் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில தி.மு.க அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான இரா.சிவா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 1,000க்கும் மேற்பட்ட தி.மு.கவினர் பங்கேற்று ஜிப்மர் நிர்வாகம் மற்றும் ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி தங்களுடைய எதிர்ப்பினை பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 1000-க்கும் மேற்பட்ட திமுகவினரை போலிஸார் கைது செய்தனர்.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!