Tamilnadu
ரெயில்வே போலிஸ் எனக்கூறி காவலாளியிடம் பைக் திருட்டு.. ஸ்கெட்ச் போட்டு திருடிய போதை ஆசாமி - பின்னணி என்ன?
புதுச்சேரி லாஸ்பேட்டை பாக்கமுடையான்பேட்டை சேர்ந்தவர் வினோத்குமார் (28). காவலாளியான இவர் கருவடிக்குப்பம் பகுதியில் உள்ள மதுக்கடையில் குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் அருகில் ஒருவர் அமர்ந்து சாராயம் குடித்துள்ளார். அவர், வினோத்குமாரிடம், தான் விழுப்புரம் ரெயில்வே போலிசில் வேலை செய்வதாக அறிமுகம் செய்துகொண்டார். அப்போது, நீ என்ன வேலை செய்கிறார் என வினோத்குமாரிடம் கேட்டதற்கு, காவலாளியாக வேலைசெய்து வருவதாக கூறினார். இதையடுத்து அந்த நபர், விழுப்புரம் ரெயில் நிலையத்தில் காவலாளி வேலை வாங்கி தருவதாக கூறினார். இதனை உண்மை என வினோத்குமார் நம்பினார்.
மது போதை மயக்கத்தில் இருந்த வினோத்குமாரிடம், அந்த நபர் புதுச்சேரி ரெயில் நிலையத்தில் தனது நண்பர் ஒருவரிடம் பணம் வாங்க வேண்டியது உள்ளது. எனவே தன்னை அங்கு அழைத்து செல்லும்படி அவர் கூறினார். இதையடுத்து வினோத்குமார், தனது மோட்டார் சைக்கிளில் அவரை அழைத்து சென்றார். போகும் வழியில் அந்த நபர், தன்னிடம் பணம் இருப்பதால் பாருக்கு சென்று மது குடிக்கலாம் என வினோத்குமாரை அழைத்தார்.
உடனே அவர்கள் இருவரும் ரயில் நிலையம் அருகே உள்ள பாருக்கு சென்று குடித்துள்ளனர். பின்னர் அந்த நபர், தனது நண்பர் ஒருவரிடம் 10 ஆயிரம் ரூபாய் வாங்க போகிறேன், அதற்கு உனது மோட்டார் சைக்கிளை கொடுக்கும்படி வினோத்குமாரிடம் கேட்டார். அவரும் மோட்டார் சைக்கிள் சாவியை கொடுத்ததை அடுத்து அந்த நபர் மோட்டார் சைக்கிளை எடுத்துச்சென்ற நீண்டநேரமாகியும் திரும்பி வரவில்லை. அப்போதுதான் வினோத்குமார் ஏமாற்றப்பட்டத்தை உணர்ந்தார்.
இது குறித்து அவர் ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலிசார் வழக்குப்பதிவு செய்து ஆசை வார்த்தைக்கூறி மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Also Read
-
”எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்” : பழனிசாமிக்கு பதிலடி தந்த அமைச்சர் எ.வ.வேலு!
-
முதலமைச்சர் கோப்பை : ‘பூப்பந்து விளையாட்டு’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!
-
”பாலம் சிறப்பானது ; பெயர் அதனினும் சிறப்பானது” : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
"அரசு அலுவலர்கள் சிறப்பாக செயல்பட்டால்தான் அரசின் திட்டங்கள் மக்களை சேரும்" - துணை முதலமைச்சர் உதயநிதி !
-
“ஏன்? எதற்கு? எப்படி?” என்ற தலைப்பில் விழிப்புணர்வுப் போட்டிகள்... யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!