Tamilnadu

Bus Stop-ல் நின்ற முதல்வரை பார்த்து வியந்த பொதுமக்கள் : பேருந்தில் நடந்த நிறை,குறை கேட்புப் பயணம் !

தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. தி.மு.க அரசு ஓராண்டில் செய்த நூற்றாண்டு சாதனையை பலரும் பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் தி.மு.க அரசின் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை ட்விட்டரில் #1YearOfCMStalin என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பொதுமக்கள் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

இந்நிலையில், தி.மு.க அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோபாலபுரத்திற்குச் சென்று கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் நினைவிடத்திற்குச் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதற்கு முன்னதாக, ராதாகிருஷ்ணன் சாலையில் காரில் சென்ற போது, திடீரென காரை நிறுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த வழியாக வந்த 29c பேருந்தில் ஏறி திடீரென ஆய்வு செய்தார். இதைப்பார்த்து பேருந்திலிருந்தவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் பேருந்திலேயே சிறிது நேரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களோ மக்களாக பயணம் செய்தார்.

அப்போது பெண் பயணிகளிடம் இலவச பேருந்து பயணத்திட்டம் எந்த அளவிற்குப் பயனுள்ளதாக இருக்கிறது என கேட்டறிந்தார். இதற்கு பெண் பயணிகள் இந்த திட்டத்தால் நாங்கள் நல்ல பயன் அடைந்துள்ளோம் என கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.

Also Read: இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகி வரும் #1YearOfCMStalin: திராவிட ஆட்சியை போற்றும் பொதுமக்கள்!