Tamilnadu
கூண்டிலிருந்து வெளியேறி தாக்கிய வெள்ளைப்புலி; நிலைக்குலைந்த பராமரிப்பாளர்: வண்டலூர் Zoo-ல் நடந்தது என்ன?
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், வெள்ளைப் புலி தாக்கிய பராமரிப்பாளர் நலமுடன் இருப்பதாக பூங்கா நிர்வாகம் தகவல்.
வண்டலூர் பூங்கா நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு விலங்குகளுக்கும் தனித்தனி பராமரிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. விலங்குகள் நடமாட்டங்களில் சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவ குழு வரவழைக்கப்பட்டு பராமரிப்பாளர்கள் உதவியுடன் விலங்குகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் அரிய வகையான வெள்ளை புலி இனம் பார்வையாளர்களுக்காக வைக்கப்பட்டுள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 6 வெள்ளைப் புலிகள் தற்போது வசித்து வருகிறது.
இதில் நகுலன் என்ற வெள்ளைப் புலி கடந்த சில நாட்களாகவே உணவு எடுத்துக்கொள்ளாமல் உடல்நலக் குறைவுடன் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து பராமரிப்பாளர்கள் உடனடியாக நகுலனுக்கு பரிசோதனை மேற்கொள்வதற்காக மருத்துவ குழுவினரிடம் தெரிவித்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து மருத்துவ குழுவினர் பராமரிப்பாளர் உதவியுடன் வெள்ளைப் புலியை கூண்டில் வைத்து, பரிசோதனை மேற்கொள்வதற்காக முயற்சி மேற்கொண்டனர். அப்பொழுது ஆசனவாய்ப் பகுதியில் வெள்ளைப் புலியின் மாதிரியை சேகரிக்க முயன்ற போது, கூண்டின் தாழ் சரிவர அடைக்கப்படாததால் புலி வெளியேறி பராமரிப்பாளர் செல்லையாவை வெள்ளைப்புலி தாக்கியது.
உடனடியாக சுதாரித்துக் கொண்ட பூங்கா ஊழியர்கள் கூண்டை சரியான நேரத்தில் பூட்டியுள்ளனர். இதில் புலி தாக்கியதால் நிலை குலைந்து தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மீட்ட பூங்கா ஊழியர்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செல்லையா வீடு திரும்பியதாக பூங்கா நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலங்கு பராமரிப்பாளரை வெள்ளைப்புலி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
அரசு உதவி வழக்குரைஞர் நிலை 2 பணி... தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
சட்டம் - ஒழுங்கை உறுதிப்படுத்திய காவல்துறை: தமிழ்நாட்டில் முக்கிய குற்றங்கள் குறைந்தது: அதிகாரிகள் தகவல்!
-
வெளியானது ஐபிஎல் 2026 முதற்கட்ட அட்டவணை… El Clasico CSK vs MI போட்டிகள் இல்லையா? - முழு விவரம்!
-
“மீனவர்கள் கைதில் மெத்தனமாக இருப்பது ஏன்?” -நாடாளுமன்றத்தில் தி.மு.க MP-க்களின் அனல் பறந்த கேள்விகள்!
-
ரூ.35.45 கோடி மதிப்பில் முன்னாள் படைவீரர்கள் விடுதி, பயிற்சி மையக் கட்டடம்: அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்!