Tamilnadu
“இரண்டு மகன்களும் அடுத்தடுத்து தற்கொலை.. விரக்தியில் முதிய தம்பதி எடுத்த விபரீதம்”: மனதை உருக்கும் சோகம்!
ராணிப்பேட்டை அடுத்த காரை கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி குணசுந்தரி. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். இதில் மூத்த மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாகத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து இரண்டாவது மகன் ரமேஷ்க்கு சில நாட்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இன்று தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர்களும் அதே அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பிறகு அங்கு வந்த போலிஸார் மூன்று பேரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Also Read
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அஜித் குமார் மரணம் விவகாரம்: “Sorry மா.. ஒரு 'அப்பாவாக.. ஒரே Phone Call!” - அமைச்சர் TRB ராஜா நெகிழ்ச்சி!
-
“நீங்கள் தான் தமிழ்நாட்டை தொடர்ந்து ஆள வேண்டும்” : முதலமைச்சரிடம் நெகிழ்ந்து பேசிய பொதுமக்கள் !
-
“ஓரணியில் தமிழ்நாடு” - வீடு வீடாகச் சென்று முதலமைச்சர் பரப்புரை - மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிய பொதுமக்கள்!