Tamilnadu
மக்களே உஷார் - அதிரவைக்கும் சைபர் கிரைம் குற்றங்கள் : QR Code மோசடியிலிருந்து தப்பிப்பது எப்படி..?
மக்களிடம் அன்றாட டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்த நிலையில் நூதன மோசடிகளும் அதிகரித்தே வருகிறது. முன்பு ATM கார்டுகளின் எண்ணைக் கூறச் சொல்லி மோசடி செய்த வந்த கும்பல் தற்போது QR Code பயன்படுத்தி நூதன முறையில் பணத்திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த மோசடியில் சாமானிய மக்கள் முதல் தொழிலதிபர்கள் என அனைவரும் ஏமாந்து வருகிறார். இது குறித்தான புகார்களும் காவல்நிலையங்களில் குவிந்து வருகிறது. இந்தியா முழுவதும் இப்படியான மோசடி நடைபெற்று வருகிறது. இந்த QR Code மோசடி குறித்து போலிஸார் எச்சக்கை விடுத்து வருகின்றனர்.
அதிகமாக இந்த மோசடி OLX விற்பனை தளத்தை பயன்படுத்தியே நடைபெறுகிறது. இதில் ஒரு பொருளை வாங்கும்போது, அதற்கான பணத்தை QR Code-ல் அனுப்பும் போதே இந்த மோசடி நடைபெறுகிறது. மேலும் உங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு, பரிசு பொருள் கிடைத்துள்ளது, இந்த QR Code ஸ்கேன் செய்தால் பரிசு கிடைக்கும் என ஒரு மெசேஜ் வரும். நாமும் இதை நம்பி ஸ்கேன் செய்தால், அவ்வளவுதான் நமது வங்கி கணக்கிலிருந்து பணம் திருடப்படும்.
அதேபோல் ராணுவ வீரர்களின் பெயர்களை பயன்படுத்தியும் தற்போது மோசடி நடைபெறுவதாக சைபர் கிரைம் பிரிவு போலிஸார் மகேந்திரன் தெரிவித்துள்ளார். ராணுவ வீரரின் பெயரில் OLX தளத்தில் கார் அல்லது வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்வதாக கூறி விளம்பரம் செய்யப்படுகிறது.
நமக்கு குறைந்த விளையில் பொருட்கள் கிடைக்கும் என்ற ஆசையில் பலரும் அந்த நபரின் விவரங்களை குறித்து முழுமையாக ஆராயாமல் பணத்தை இழந்து விடுகின்றனர். எனவே ராணுவ வீரர்களின் பெயர்களின் வரும் விளம்பரங்களை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த QR Code மோசடியிலிருந்து நாம் தப்பிக்க வேண்டும் என்றால் நமக்குத் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் QR Code ஸ்கேன் செய்வதை தவிர்த்தாலே இந்த நூதன மோசடியில் இருந்து நாம் தப்பித்துக் கொள்ள முடியும்.
அதேபோல் ஆன்லைன் பரிவர்த்தனையில் பொருளை வாங்கும்போது, பயனர் உண்மையானவரா என்பதைச் சரிபார்த்த பிறகே பணம் அனுப்பினால் சரியாக இருக்கும். OLX-ல் எதையாவது விற்றால் வாங்குபவரின் சுயவிவரங்களை நன்கு ஆராய்ந்து பார்க்க வேண்டும். இவற்றில் நாம் கவனத்துடன் இருந்தால், நம்மால் QR Code மோசடியிலிருந்து எளிதாகத் தப்பித்து விடலாம்.
Also Read
-
சிறுநீரக முறைகேடு - பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
-
“கடன் சுமையை பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை” : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
-
ரூ.18.1 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கங்கள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“என் பள்ளி! என் பெருமை!” போட்டிகள்! : வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கிய அமைச்சர்கள்!
-
ஃபாக்ஸ்கான் முதலீடு : சட்டபேரவையில் விளக்கிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!